தமிழகஅரசு என்றென்றும் மக்கள் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


தமிழகஅரசு என்றென்றும் மக்கள் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

தமிழகஅரசு என்றென்றும் மக்கள் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.

தஞ்சாவூர்,


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பரிசுத்தொகை மற்றும் விலையில்லா வேட்டி–சேலை வழங்கும் விழா தஞ்சை காவேரி சிறப்பு அங்காடியில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.


விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பரிசு தொகை, விலையில்லா வேட்டி–சேலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 51 ஆயிரத்து 628 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,185 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை அனைவரும் பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழகஅரசானது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பு அங்காடி முன்னாள் தலைவர் பண்டரிநாதன், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் துணை மேயர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story