காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
கலெக்டர் பொன்னையா விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்து 861 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தமிழக அரசால் ரூ.78.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்பு துண்டு உட்பட ரூ.1000 ரொக்கமாக ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் காஞ்சீபுரம் சரக துணை பதிவாளர் உமாபதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story