மாவட்ட செய்திகள்

9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் + "||" + 9th, 10th grade students to provide the laptop

9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோபி நகராட்சியில் ரூ.52 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. கோபி அருகே கொளப்பலூரில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் அடுத்த மாதம் தொடங்கப்படும். இதன் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சமூக நலத்துறையும், கல்வித்துறையும் இணைந்து 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச ஓட்ட போட்டிக்கு குமரி மாணவி தேர்வு
சர்வதேச ஓட்ட போட்டிக்கு குமரி மாணவி லிபோனா ரோஸ் ஜின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
2. நோணாங்குப்பம் அரசுப்பள்ளியில் மாணவ–மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை; அரவணைத்தும், கைதட்டியும் அசத்தினார்
பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
3. திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 7 ஆண்டு சிறை
திருப்பூரில் 3–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
4. புதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு
புதுவை மாநிலத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
5. பள்ளி அருகே முட்புதரில் தீ வகுப்பறைக்குள் புகை சூழ்ந்ததால் மாணவ– மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் பள்ளி அருகே உள்ள முட்புதரில் ஏற்பட்ட தீவிபத்தால் வகுப்பறைக்குள் புகை சூழ்ந்தது. இதனால் மாணவ–மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...