பின்னலாடை துறையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்; தொழில்துறையினர் கோரிக்கை


பின்னலாடை துறையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்; தொழில்துறையினர் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

பின்னலாடை துறையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

தமிழக அரசு கடந்த 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்று பொருட்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களும் அந்த மாற்று பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் ஜாப் ஒர்க்குகள் செய்ய என்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்த ஆடைகளை தொழில்துறையினர் பலர் பிளாஸ்டிக் பைகளில் தான் கொண்டு சென்று வந்து கொண்டிருந்தார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:–

தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது. பிளாஸ்டிக் பயன்பாடு திருப்பூரில் அதிகளவில் இருந்தது. தற்போது இது குறைந்து வருகிறது. ஆடை தயாரிப்பு துறையில் பாலிபேக்குகள் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜாப் ஒர்க் செய்வதற்கு மற்றும் ஜாப் ஒர்க்குகள் செய்யப்பட்ட ஆடைகள் வாங்கி வர என பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகமாக இருந்தது. மேலும், சில்லரை வியாபாரிகள் பலர் ஆடைகளை பிளாஸ்டிக் பைகளில் தான் போட்டு விற்பனை செய்து வந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாற்று பொருட்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு பின்னலாடை துறையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story