தூத்துக்குடியில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது


தூத்துக்குடியில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jan 2019 3:30 AM IST (Updated: 7 Jan 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ளதை தொடர்ந்து வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ளதை தொடர்ந்து வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கோலப்பொடி

தூத்துக்குடி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தற்போதே தயாராக தொடங்கி விட்டனர். மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளையடித்து சுத்தம் செய்து வருகின்றனர். அதே போன்று பண்டிகைக்கு தேவையான பல்வேறு பொருட்களையும் வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று மக்கள் வீடுகளின் முன்பு வண்ண கோலங்களை வரைவது வழக்கம். இதற்காக பல வண்ணங்களில் கோலப்பொடிகள் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு வந்து உள்ளன. ஒரு பாக்கெட் வண்ண கோலப்பொடி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பனை ஓலை

மேலும் புதிய பனைஓலை கொண்டு பொங்கலிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனைமரங்களில் இருந்து ஓலைகள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ஓலைகள் அனைத்தும் காய வைக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. ஒரு பனை ஓலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கி உள்ளதால், பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ளது.

Next Story