கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்க்காவடி விழா திரளான பக்தர்கள் தரிசனம்


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்க்காவடி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:30 AM IST (Updated: 7 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று நடந்த மலர் காவடி விழாவில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கழுகுமலை, 

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று நடந்த மலர் காவடி விழாவில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மலர்க்காவடி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முருகர் பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 6-ம் ஆண்டு மலர்க்காவடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் மேலவாசலில் உள்ள மண்டபத்தில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடம் எழுந்தருளினார்.

இந்த விழாவில், மயிலம் மற்றும் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி சத்திய ஞான மகாதேவ பரமாச்சார்ய சுவாமி, கோவை குமரகுருபர சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்கள்.

500-க்கும் மேற்பட்டவர்கள்

மலர்க்காவடியானது கோவில் மேல வாசலில் தொடங்கி, கோவில் கிரி பிரகாரம் மேலரத வீதி, கிரி பிரகாரம் கீழ ரதவீதி, நாராயண சுவாமி கோவில் தெரு, தெற்கு ரதவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தது. மலர்க்காவடி எடுத்து வந்தவர்கள் மலர்களை கோவிலில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அந்த மலர்களால் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மலர்க்காவடி எடுத்து வந்தனர். இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story