தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி முத்திரை தயார் செய்யும் போட்டி 20-ந் தேதி கடைசி நாள்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்கான முத்திரை தயார் செய்யும் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்கான முத்திரை தயார் செய்யும் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முத்திரை
மத்திய அரசு அரசு சீர்மிகு நகரமாக(ஸ்மார்ட் சிட்டி) தூத்துக்குடி மாநகராட்சியையும் தேர்வு செய்து உள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசு கூட்டுறவு விவகாரங்கள் அமைச்சகம், தூத்துக்குடி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனமாக பதிவு செய்து உள்ளது. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்துக்கு தனியாக முத்திரை(லோகோ) பயன்படுத்துவது அவசியம் ஆகிறது.
இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்துக்கான முத்திரையை பல வண்ணங்களில் பொதுமக்கள் தங்கள் சிந்தனையில் தோன்றும் வடிவில் தயாரிக்கலாம்.
வருகிற 20-ந் தேதி
அதனை 15 நாட்களுக்குள் com-mr.thoothukudi@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பி.டி.எப் வடிவிலும், மற்றும் அச்சுவடிவில் “மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட், 113, பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடி-2“ என்ற முகவரிக்கும் பதிவு தபாலில் வருகிற 20-ந் தேதி மாலை 5-45 மணிக்குள் அனுப்ப வேண்டும். சமர்ப்பிக்கப்படும் முத்திரைகளில் சிறந்த முத்திரை தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் மூலம் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story