பிச்சை எடுத்து மது குடிப்பதை கண்டித்தவர் கொலை; போலீசார் விசாரணை


பிச்சை எடுத்து மது குடிப்பதை கண்டித்தவர் கொலை; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

பிச்சை எடுத்து மதுகுடிப்பதை கண்டித்த தம்பி கடப்பாரையால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால்,

காரைக்கால் தெய்தா வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் டேவிட் (வயது35) மெக்கானிக். இவருடைய அண்ணன் புவனேஷ் (39). மனநிலை பாதிக்கப்பட்ட வர். இவரை ராஜேஷ் டேவிட் தான் கவனித்து வந்தார்.

இந்தநிலையில் ராஜேஷ் டேவிட் வீட்டில் இல்லாத நேரத்தில் புவனேஷ் அருகில் உள்ளவர்களிடம் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் டீ, மது வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனை அறிந்த அவரது தம்பி ராஜேஷ் டேவிட் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் தனது தம்பி மீது புவனேஷ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ராஜேசை கடப்பாரை கம்பியால் புவனேஷ் குத்தினார். இதில் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ராஜேஷ் டேவிட்டை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் டேவிட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story