ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகை பறித்தவர்கள் கைது
காரைக்காலில் கழுத்தில் கத்தியை வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகைகளை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
காரைக்கால்,
காரைக்கால் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 72). ஓய்வுபெற்ற ஆசிரியர். கடந்த 3-ந்தேதி காரைக்கால் நகர் பகுதியான ஜுபைதா நகரில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து தங்க சங்கிலி, மோதிரம், கை செயின் மற்றும் தங்கத்தால் ஆன கை கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
மர்ம ஆசாமிகள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் களின் பதிவு எண்ணை வைத்து காரைக்கால்மேட்டை சேர்ந்த தினேஷ் (25) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தினேஷ் தனது நண்பர்களான புதுச்சேரியைச் சேர்ந்த பிரதீப் (31), மர்லின்( 31), செல்வா (23), சுந்தர் (23), அரவிந்த் (23) ஆகிய 5 பேருடன் சேர்ந்து ராமநாதன் கழுத்தில் கத்தியை வைத்து தங்க, வைரம் நகைகளை கொள்ளையடித் ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் தினேசை கைது செய்தனர்.
அவரது தகவலின் பேரில் காரைக்கால் நகர போலீசார் புதுச்சேரி வந்து பிரதீப், மர்லின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வைர நகை, ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளியான செல்வா, சுந்தர், அரவிந்த் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story