பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக கரும்புகள் குவிப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக கரும்புகள் குவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி, நாகர்கோவிலில் விற்பனைக்காக கரும்புகள் குவிக்கப்பட்டு உள்ளன.

நாகர்கோவில்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

இதையொட்டி பொங்கல் பானை, மண் அடுப்பு மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் ஆகியவை சந்தைக்கு வந்துள்ளன.

பொங்கல் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது கரும்பு தான். இந்த கரும்புகள் வெளி மாவட்டங்களில் இருந்து லாரி, லாரியாக குமரிக்கு வந்தபடி உள்ளன. கட்டு கட்டாக வரும் கரும்புகள் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் டதி பெண்கள் பள்ளி சந்திப்பு, வடசேரி சந்தை, அப்டா மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு கடைகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவிக்கப்பட்டு உள்ளன. இங்கு கரும்பு விற்பனை நடந்து வருகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.400-க்கு விற்பனை ஆகியது. அதிலும் பொங்கல் நெருங்கும்போது இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும் பனங்கிழங்கும் விற்பனைக்கு வந்துள்ளது. 

Next Story