குளச்சலில் குடோனில் தீ விபத்து
குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமான தோட்டம் சைமன்காலனியில் உள்ளது. இந்த தோட்டத்தில் மீன்பெட்டிகளை அடுக்கி வைப்பதற்கான குடோன் உள்ளது. நேற்று அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குளச்சல்,
குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமான தோட்டம் சைமன்காலனியில் உள்ளது. இந்த தோட்டத்தில் மீன்பெட்டிகளை அடுக்கி வைப்பதற்கான குடோன் உள்ளது. நேற்று அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள..மள..வென எரிந்து குடோன் முழுவதும் பரவியது. இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடோன் முழுவதும் எரிந்து இடிந்து விழுந்தது. குடோனில் அடுக்கி வைத்திருந்த 300-க்கும் மேற்பட்ட மீன்பெட்டிகள் எரிந்து சாம்பலானது. மேலும், அருகில் நின்ற சில தென்னை மரங்களும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல், குளச்சல் வெட்டுமடை பகுதியில் சவுக்கு மர தோட்டம் உள்ளன. இங்குள்ள புதரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ ‘மள... மள...வென’ எரிந்து சவுக்குமரங்களில் பரவியது. இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Related Tags :
Next Story