7-வது மாடியில் இருந்து விழுந்து ஆங்கில பத்திரிகை முன்னாள் நிர்வாகி பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை
ஆங்கில பத்திரிகை முன்னாள் துணை தலைவர் 7-வது மாடியில் இருந்து விழுந்து பலியானார்.
மும்பை,
ஆங்கில பத்திரிகை முன்னாள் துணை தலைவர் 7-வது மாடியில் இருந்து விழுந்து பலியானார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து விழுந்தார்
மும்பை கோரேகாவ் மேற்கு, சித்தார்த் நகர் பகுதியில் உள்ள திரிமூர்த்தி என்ற 7 மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆதர்ஷ் மிஸ்ரா (வயது49). இவர் பிரபல ஆங்கில தினப்பத்திரிகையின் துணை தலைவராக இருந்தவர். இவர் தினமும் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வழக்கம்போல் அவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக மொட்டை மாடிக்கு சென்று இருந்தார். இதில் அவர் திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆதர்ஷ் மிஸ்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தற்கொலை?
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், ஆதர்ஷ் மிஸ்ரா 7-வது மாடியில் இருந்து மொட்டை மாடிக்கு செல்லும் காட்சிகளும், 10.30 மணியளவில் அவர் கீழே விழும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
ஆதர்ஷ் தவறி விழுந்து பலியானாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story