தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணிகள்


தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:10 AM GMT (Updated: 7 Jan 2019 10:24 AM GMT)

தமிழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தமிழக வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எஸ்.டி. பிரிவினருக்கான 4 பின்னடைவுப் பணியிடங்களும் அடக்கம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி., மற்றும் பி.சி., பி.சி.எம். மற்றும் விதவைப் பெண்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக் கல்வியுடன் (பிளஸ்-2), வேளாண்மை டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பித் திருப்பவர்கள், தேர்வுக்கட்டணமாக ரூ.100 மட்டும் செலத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான தாள்-1, தாள்-2 தேர்வுகள் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

கல்வி அதிகாரி

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பவும், டி.என்.பி. எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்குப் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றவர் களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

முதுநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து, பி.எட். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து பள்ளிக்கல்வி வரை படித்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 9-1-2019-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்.

Next Story