புங்கறை பத்ரகாளியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா
புங்கறை பத்ரகாளியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா நடந்தது.
பத்மநாபபுரம்,
புங்கறை பத்ரகாளியம்மன் கோவில் 46–வது ஆண்டு பஜனை பட்டாபிஷேக விழா மற்றும் 39–வது ஆண்டு கொடை விழா ஆகியவற்றை கடந்த 28–ந்தேதி வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீட சுவாமி சிவாத்மானந்தஜி மகராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
விழா நாட்களில் தினமும் காலை கணபதி ஹோமம், தீபாராதனை, அகண்ட நாம ஜெபம், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
10–ம் நாள் திருவிழாவன்று காலை நையாண்டி மேளம், கரகாட்டம், சிங்காரிமேளம், தப்பாட்டம், கர்நாடக பொம்மலாட்டம் மற்றும் 5 யானைகளுடன் சுவாமி பல்லக்கில் வீதி உலா புறப்பட்டது. கோவில் சன்னதியில் இருந்து நங்கச்சிவிளை, பூக்கடை, பருத்தி காட்டுவிளை, கோழிப்போர் விளை, அமராவதி, பனவிளை வழியாக முகமாத்தூர் கண்டன் சாஸ்தா கோவிலை சாமி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மல்லன்விளை வழியாக கோவிலை அடைந்ததும், அங்கு சிறப்பு தீபாராதனை, சமபந்தி விருந்து ஆகியவை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் முருகராஜன், துணை தலைவர் ராஜி, செயலாளர் வினோத்ராஜா, துணை செயலாளர் ரவி, பொருளாளர் பங்கிராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story