போரூரில் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
போரூரில் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள யூரோ ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
சென்னை போரூர் சக்தி நகர், கணேஷ் அவென்யூ 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மோகன்(வயது 58). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார்.
நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தது.
பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 50 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள யூரோக்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மோகன், குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசையை காட்டிச்சென்று உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story