மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் + "||" + Digg Booth committee consultation meeting

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் அறிவு (என்கிற) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் மனோகரன், இணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் தவசீலன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்தையன், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் ஜெயசங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூதலூர் அருகே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
பூதலூர் அருகே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள்மனுஅளித்தனர்.
2. கருகிய நெல் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மனு கொடுத்தனர்
அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி கருகிய நெல் பயிர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
4. கலெக்டர் அலுவலகத்தில் தென் மண்டல வனத்துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்பு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தென் மண்டல வனத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.
5. அரூரில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரூரை தலைமையிடமாக கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...