திருவாரூர் அருகே புலிவலத்தில் இன்று நடக்கிறது தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
திருவாரூர் அருகே புலிவலத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க. மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
திருவாரூர்,
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற மூன்று முழுக்கங்களை முன்வைத்து கடந்த 3–ந் தேதி முதல் பிப்ரவரி 10–ந் தேதி வரை 12,617 ஊராட்சிகளும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 2–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் ஊராட்சி தி.மு.க. சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி மாதம் 17–ந் தேதி வரை நடைபெறும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
திருவாரூரில் நடைபெறும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று (புதன்கிழமை) காலை திருவாரூர் வருகிறார். ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அங்கிருந்து காலை 8 மணிக்கு புறபட்டு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் வில்வனப்படுகை செல்கிறார். அங்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். மதியம் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு செல்கிறார்.

Related Tags :
Next Story