கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் நிலையம் முற்றுகை
கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
சென்னை மணலி கிராம தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 42). பாரிமுனையில் கப்பல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விக்னேஸ்வரி (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பார்த்திபன் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த விக்னேஸ்வரி, கள்ளக்காதலை கைவிடும்படி பல முறை கணவரிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் பார்த்திபன் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று பார்த்திபன் அணிந்திருந்த சட்டை பையில் கள்ளக்காதலியின் மகனுடைய ஆதார் கார்டு இருந்தது. அதில் பார்த்திபன் தந்தை என்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஸ்வரி கணவரிடம் சண்டை போட்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மணலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விக்னேஸ்வரியின் உறவினர்கள், அவரது சாவுக்கு காரணமான பார்த்திபனை கைது செய்ய வலியுறுத்தி மணலி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story