மாவட்ட செய்திகள்

திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை + "||" + Married couple suicide in 1½ years

திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை

திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை
பல்லடம் அருகே திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 57). இவருடைய மனைவி கமலம் (50). இவர்களுடைய மகன் முத்துக்கிருஷ்ணன் (32). பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் திருப்பூர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி– ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் என்ஜினீயரிங் பட்டதாரியான தங்கமணிக்கும் (23) கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் முத்துக்கிருஷ்ணனும், அவருடைய மனைவி தங்கமணியும் பல்லடம் மகாலட்சுமி நகர் 10–வது தெரு, தெற்கு வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக முத்துக்கிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு வரும் முத்துக்கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்கமணிக்கு இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர். மேலும் உடல் நலம் குறித்து, தினமும் காலையிலும், மாலையிலும் வெள்ளியங்கிரி, தனது மகள் தங்கமணியிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி, தனது மகளிடம் பேசி உள்ளார். அப்போது தங்கமணி ‘‘ தனது கணவர், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதாவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும்’’ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வெள்ளியங்கிரி தனது மகளின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள பல முறை முயன்றும், செல்போன் ஒலித்ததே தவிர, அவர் அதை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளியங்கிரி, தனது உறவினர்களுடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்தபோது வீட்டினுள், முத்துக்கிருஷ்ணனும், தங்கமணியும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள அறையில் கணவனும்–மனைவியும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளனரா? என்றுஅந்த அறையில் போலீசார் தேடினார்கள். ஆனால் எந்த கடிதமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தங்கமணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால், சப்–கலெக்டர் ஷ்ரவன் குமார் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 1½ ஆண்டில் தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை
பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.
3. மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி
போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியான வாலிபரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்த 2 நாட்களில் கல்லூரி பேராசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...