நெய்வேலியில் தனித்தனி விபத்து, கொத்தனார் உள்பட 2 பேர் பலி


நெய்வேலியில் தனித்தனி விபத்து, கொத்தனார் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் நடந்த தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நெய்வேலி, 

வடலூர் ஆபத்தாரணபுரத்தில் உள்ள பூசாலிக்குப்பம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(வயது 22). கொத்தனார். இவர் இந்திரா நகர் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

அப்போது, வடக்குத்து பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரகாஷ்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் அனிதா கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், நெய்வேலி 3-வது வட்டம் சாம்ராட் அசோகர் சாலையை சேர்ந்தவர் தேவராஜ்(82). இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் 9-வது வட்டத்தில் உள்ள பாரதி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சாக்கு மூட்டை ஒன்றை கட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார், இவரது சாக்கு முட்டையின் மீது உரசியபடி சென்றது. இனால் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதில் காயமடைந்த தேவராஜ் சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தேவராஜ் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story