கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கோட்டை பஸ்நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் வன்னியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட இணைசெயலாளர் வேல்மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை செங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை முன்பு நடந்த சாலைமறியலுக்கு, பீடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் தமிழ்செல்வி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாலு, விவசாய சங்க தாலுகா செயலாளர் சங்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குணசீலன் உள்பட 84 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமசுப்பு, ஆட்டோ ஓட்டுனர் சங்க நகர செயலாளர் பாக்கியராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்பட 43 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.திருவேங்கடம் மெயின் பஜாரில் காந்தி மண்டபம் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, அகில இந்திய விவசாய சங்க மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை திருவேங்கடம் போலீசார் கைது செய்தனர்.
கடையத்தில் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கை குழு சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மேனகா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பொன்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 86 பேரை கடையம் போலீசார் கைது செய்தனர்.
அம்பையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அம்பை கிளை தபால் சங்க செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர் சங்கம் முத்தையா, எல்.ஐ.சி. ஓய்வூதிய சங்கம் ராஜகோபால், தபால்துறை ஓய்வூதிய சங்கம் தியாகராஜன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன், ஆனந்த், சிதம்பரம், கந்தசாமி, ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆரியமுல்லை, தர்மகனி, தங்கம், அய்யாத்துரை உள்ளிட்ட 50 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இதே போல் முக்கூடலில் 31 பேரையும், புளியங்குடியில் 62 பேரையும், வள்ளியூரில் 23 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அம்பையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அம்பை கிளை தபால் சங்க செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர் சங்கம் முத்தையா, எல்.ஐ.சி. ஓய்வூதிய சங்கம் ராஜகோபால், தபால்துறை ஓய்வூதிய சங்கம் தியாகராஜன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன், ஆனந்த், சிதம்பரம், கந்தசாமி, ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story