பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மறியலில் ஈடுபட்ட 435 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 435 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
அகில இந்திய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. கருமலையான், மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. சடையப்பன், எச்.எம்.எஸ். பாக்கியம், டி.டி.எஸ்.எப். கல்யாண சுந்தரம், எஸ்.டி.டி.யு. ஹைதர் அலி இமாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரு சில வங்கிகளை சேர்ந்த பெரும்பாலான வங்கி ஊழியர் சங்கத்தினர் நேற்று பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். மேலும் வங்கி ஊழியர்கள் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பெடரல் வங்கி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி விக்டர் துரைராஜ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வினோத், அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் முத்துகுமாரசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்களும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முகசுந்தரராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணன், அருணாசலம், முத்து முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் மதுபால் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க தலைவர் சிவசங்கரன், பொதுச் செயலாளர் முத்துகுமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காப்பீட்டு பிரீமியத்தொகைக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வணிக வரித்துறை அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் அந்தந்த அலுவலகங்கள் முன்பு சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 95 பெண்கள் உள்பட 435 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூரில் 23 பேரும், வாசுதேவநல்லூரில் 43 பேரும், கடையத்தில் 86 பேரும், புளியங்குடியில் 62 பேரும், செங்கோட்டையில் 37 பேரும், ஆலங்குளத்தில் 84 பேரும், பாவூர்சத்திரத்தில் 50 பேரும், திருவேங்கடத்தில் 19 பேரும், முக்கூடலில் 31 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் 95 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்தத்தையொட்டி இன்றும் (புதன்கிழமை) பல்வேறு இடங்களில் மறியல் நடைபெற உள்ளன.

Related Tags :
Next Story