நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட விருப்பமில்லை ராகுல் காந்திக்கு பிரியா தத் கடிதம்


நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட விருப்பமில்லை ராகுல் காந்திக்கு பிரியா தத் கடிதம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று ராகுல் காந்திக்கு பிரியா தத் கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை,

முன்னாள் மத்திய மந்திரி சுனில் தத்தின் மகள் பிரியா தத். இவர் 2005-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியிலும், 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மத்திய மும்பை தொகுதியிலும் வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பூனம் மகாஜனிடம் 1¾ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியே உள்ளார். சமீபத்தில் அவரது தேசிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்தநிலையில் பிரியா தத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்து உள்ளார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதாக அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story