கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 5:00 AM IST (Updated: 9 Jan 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அலுவலகங்கள் வெறிச்சோடின

மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே மற்றும் துறைமுக தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் சி.எஸ்.எம்.டி.யில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தால் நேற்று மும்பையில் உள்ள வங்கிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story