மகளிர் விடுதி நடத்த சமூகநலத்துறையில் பதிவு செய்ய வேண்டும்; மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
மகளிர் விடுதிகள் நடத்துபவர்கள் சமூகநலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்டத்தில் மகளிர் விடுதிகள் நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டத்தின்கீழ் அதை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதைத்தொடர்ந்து இனிமேல் உரிய பதிவுச்சான்று பெற்ற மகளிர் விடுதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும்.
எனவே மாவட்டத்தில் பதிவுச்சான்று பெறாமல் இயங்கி வரும் மகளிர் விடுதிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மகளில் விடுதிகள் நடத்துபவர்கள் கட்டயமாக வருகிற 31–ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story