மனைவிக்கு வேலைப்பளு கொடுப்பதாக கல்லூரி பெண் முதல்வரை மிரட்ட சென்ற முகமூடி ஆசாமி
மனைவிக்கு அதிக வேலைப்பளு கொடுப்பதாக கருதி கல்லூரி பெண் முதல்வரை மிரட்டச் சென்ற ஆசாமி பிடிபட்டார். அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரைக்கால்,
காரைக்கால் நேருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 53). காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி. காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர்.
இந்தநிலையில் பானுமதியின் வீட்டுக்கு முகமூடி அணிந்த ஆசாமி ஒருவர் நேற்று காலை சென்றார். அவரை பார்த்த பாலாஜி கொள்ளையன் என்று நினைத்து தடுக்க முயன்றார். அப்போது அவரை அந்த ஆசாமி கத்தியால் கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கையில் காயமடைந்த பாலாஜி அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து முகமூடி ஆசாமியை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதன்பின் அவரை காரைக்கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பாலாஜியின் மனைவி பானுமதி வேலை பார்த்து வரும் கல்லூரியில் படித்து வரும் கவிதாவின் கணவர் கந்தவேலு (30) என்பது தெரியவந்தது.
கல்லூரியில் அதிக வேலை கொடுப்பதால் மனைவியால் வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே கல்லூரி முதல்வர் பானுமதியை மிரட்டுவதற்காக அவரது வீட்டுக்கு முகமூடி அணிந்து சென்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story