வானவில்: விரல்களின் அசைவைக் கொண்டு உள்ளடு செய்யலாம்


வானவில்: விரல்களின் அசைவைக் கொண்டு உள்ளடு செய்யலாம்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:30 AM IST (Updated: 9 Jan 2019 11:30 AM IST)
t-max-icont-min-icon

கணினியில் உள்ளடு செய்யக்கூடிய கருவிகளான கீ-போர்டு மற்றும் மவுஸ் ஆகிய இரண்டின் பயன்பாட்டையும் ஒரே கருவிக்குள் கொண்டு வந்திருக்கிறது நவீன விஞ்ஞானம். ஆம் ‘டேப்’ ( TAP ) என்று அழைக்கப்படும் இந்த கருவி பார்ப்பதற்கு ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதை அணிந்து கொண்டு எந்தவிதமான புளூடூத் கருவிகளையும் நாம் உபயோகிக்கலாம். அதாவது டேப் அணிந்த விரல்களைக் கொண்டு தட்டினால் கிளிக் செய்யும். கட்டைவிரலை வேண்டிய படி அசைத்தால் மவுஸ் செய்யும் வேலையை அது செய்யும். டாப் அணிந்து கொண்டு கணினியில் வேலை செய்வது புதிதான அதே சமயம் எளிதான அனுபவத்தைக் கொடுக்கும். எதிர்காலத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம் என்கிற உணர்வைத் தருகிறது இந்த கருவி.

இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மக்கும் தன்மையுள்ள பொருட்களில் தயாரிக்கப்படுகிறது. வீடியோ கேம் விளையாடுவதற்கும் இது பயன்படும். டேப்பை விரல்களில் அணிந்து கொண்டால் போதும். எதையும் பிடித்துக் கொள்ள வேண்டியதில்லை. நமது விரல்களின் அசைவைக் கொண்டு திரையை இயக்கலாம். கணினி மட்டுமின்றி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் ஆகியவைகளையும் டேப் கொண்டு பயன்படுத்தலாம்.

Next Story