வானவில்: 22 கிராம் எடையில் பாக்கெட் கேமரா


வானவில்:  22 கிராம் எடையில் பாக்கெட் கேமரா
x
தினத்தந்தி 9 Jan 2019 11:47 AM IST (Updated: 9 Jan 2019 11:47 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா செல்லும் போதோ அல்லது சாகசப் பயணம் செல்லும் போதோ நல்லத் தரத்தில் புகைப்படம் எடுக்க கேமராவைத் தூக்கி கொண்டு சுற்ற வேண்டியிருக்கும். அந்த கேமரா வெறும் 22 கிராம்கள் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?, இது எப்படி சாத்தியம் என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது உலகின் மிகச் சிறியதான இந்த பாக்கெட் சைஸ் கேமரா.

தோற்றத்தில் சிறிதானாலும் பெரிய கேமராக்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் இந்த குட்டி கருவி செய்யும்.

பதினைந்து நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் இந்த கேமராவை உபயோகிக்கலாம். 1080 பிக்சல்களில் அசத்தலான வீடியோக்கள் எடுத்து மகிழலாம். 32 ஜி.பி. வரையில் நம் படங்களை சேமித்து கொள்ளலாம். 120 டிகிரி கோணம் வரையில் சுற்றிலும் படம்பிடிக்கலாம். பகல் வெளிச்சத்தில் மட்டுமின்றி இரவிலும் நல்ல தரத்தில் புகைப்படங்களை இந்த கேமராவில் எடுக்க முடியும். பத்துமீட்டர் ஆழம் வரை தண்ணீரில் மூழ்கினாலும் சேதமடையாத வாட்டர் புரூப்லென்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இந்த கேமராவின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் இதை நான்கு விதங்களில் சுவற்றிலோ அல்லது எந்த இடத்திலும் பொருத்திக் கொண்டு புகைப்படம் எடுக்கலாம். கிளிப், காந்தம், பசை கொண்டு ஓட்டுதல் அல்லது காற்றை உள்ளிழுத்து இறுக்கி பிடித்தல் என்று இவற்றில் எந்த முறையையும் பயன்படுத்தலாம். எஸ்.எல்.ஆர் கேமராவின் தரத்தில் அருமையான படங்களை பதிவு செய்யும் இந்த மினி கேமரா விரைவில் விற்பனைக்கு வருகிறது.

Next Story