வானவில்: இன்ஸ்டன் அயர்ன் ‘டெர்ஸா ஸ்டீம்’
இன்றைய அவசரமான சூழலில் ஆடைகளை அன்றாடம் அயர்ன் செய்து அணிந்து கொள்வது என்பது அனைவருக்குமே சவாலான விஷயம்தான். கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் மொபைல் அயர்ன் செய்வோரிடம் கொடுத்து வாங்கி வைப்பதும் சற்று சிரமமான விஷயமாகத்தான் உள்ளது.
தினசரி அயர்ன் பாக்ஸுடன் போராடுவது அனைவருக்கும் சாத்தியமில்லாதது. இத்தகையோருக்கு சிறந்த தீர்வாக வந்துள்ளது, டெர்ஸா ஸ்டீம். ஆடைகளை அப்படியே ஹாங்கரில் இதில் மாட்டி வைத்தால் 10 நிமிடங்களில் நீராவி மூலம் உடையிலுள்ள சுருக்கங்களை நீக்கி புதுத் துணி போன்ற தோற்றத்துடன் இது தந்துவிடும்.
அத்துடன் துணியின் மீது புதிய நறுமணமும் வீசச் செய்யலாம். இது சுவரில் மாட்டும் வசதி கொண்டது. இதில் உள்ள ஒரு பகுதியில் நறுமணம் வீசும் திரவத்தை வைத்தால் அதுவே நீராவியாகி சுருக்கத்தை போக்குவதோடு, ஆடை நறுமணம் வீச வழிவகுக்கும்.
இந்த திரவத்தை இந்நிறுவனமே சிறிய பாக்கெட்டுகளாக அளிக்கிறது. இதன் விலை 500 டாலர் ஆகும்.
Related Tags :
Next Story