வானவில்: மினி ஏர் கூலர் எவா போலர்


வானவில்: மினி ஏர் கூலர் எவா போலர்
x
தினத்தந்தி 9 Jan 2019 2:24 PM IST (Updated: 9 Jan 2019 2:24 PM IST)
t-max-icont-min-icon

இப்போது எல்லா சாதனங்களும் மிகச் சிறிய அளவில் வெளிவருவது டிரெண்டாகி விட்டது. அந்த வகையில் ஒருவருக்கு மட்டுமே போதுமான குளிர் காற்றை வீசக்கூடிய மினி ஏர்கூலர் ‘எவாபோலர்’ என்ற பெயரில் வந்துள்ளது.

இது 45 சதுர அடி தூரம் வரை குளிர் காற்றை வீசும். ஆனால் 10 வாட் மின்சாரம் மட்டுமே இதற்குத் தேவை. அதாவது வழக்கமான ஏ.சி.க்கு ஆகும் மின்சாரத்தில் 100-ல் ஒரு பங்கு இருந்தாலே இதற்குப் போதும்.

இது மூன்று வித செயல்பாடுகளைக் கொண்டது. குளிர் காற்று வீசும். காற்றில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தமான காற்றை வீசச் செய்யும். அறையில் ஒரே சீரான தட்ப வெப்ப நிலையை நிலவ உதவும். மூன்று வித செயல்பாடுகளைக் கொண்ட இந்த மினி ஏர் கூலர் விலை 149 டாலர் ஆகும்.

Next Story