பாலக்கோட்டில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது


பாலக்கோட்டில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jan 2019 3:45 AM IST (Updated: 10 Jan 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அந்த கட்சி யின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தர்மபுரி, 

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் தென் பெண்ணையாற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரிநீரை எண்ணெகொல் புதூர் அணைக்கட்டில் இருந்து வலதுபுற மற்றும் இடதுபுற கால்வாய் அமைத்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் தும்பல அள்ளி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதே போன்று அலியாளம் அணைக்கட்டில் இருந்து வலதுபுற கால்வாய் அமைத்து பாலக்கோடு வட்டம் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் வழங் கும் திட்டத்தை செயல்படுத்தி அங்கிருந்து தர்மபுரி வட்டம் கடகத்தூர், சோகத்தூர், தர்ம புரி ராமாக்காள், கிருஷ்ணா புரம் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் மற்றும் ஜெர்தலாவ் கால்வாய் 5 ஆயி ரம் மீட்டரில் இருந்து புதிய கால்வாய் அமைத்து எர்ரன அள்ளி, புலிக்கரை மற்றும் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். சின்னாறு அணையில் இருந்து வெளி யேறும் உபரிநீரை பயன் படுத்தும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி அணையின் வலதுபுற கால்வாயை மேலும் நீட்டிப்பு செய்து உபரிநீரை கம்பைநல்லூர், எலவடை மற்றும் மொரப்பூர் வரை உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் ஆகிய திட்டங் களை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது மேற்கண்ட திட்டங்களுக்கு அனுமதி அளித்து இதற்காக ஆய்வு செய்ய ரூ.40 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இது தொடர்பாக நடந்த ஆய்வு பணியை தொடர்ந்து ரூ.327 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத தமிழக அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செய லாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசுகிறார். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான பி.பழனி யப்பன், கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செய லாளரும், தர்மபுரி நாடாளு மன்ற தொகுதி பொறுப்பாள ருமான ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசு கிறார். முடிவில் பாலக் கோடு ஒன்றிய செயலாளர் சி.கருணா கரன் நன்றி கூறுகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பா ளர்கள், கட்சி தொண்டர் கள் விவசாயிகள் மற்றும் பொதுமக் கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story