ஓடும் ரெயிலில் ரூ.2½ கோடி நகைகள் கொள்ளை
பாந்திராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2½ கோடி நகைகள் கொள்ளை போனது.
மும்பை,
மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் ராஜஸ்தானை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு நகைகள் ஆர்டர் செய்திருந்தார். அந்த நகைகளை ஊழியர்கள் நரேந்திரா டெய்லர், விபுல் ஆகிய 2 பேர் பாந்திராவில் இருந்து உதய்பூர் செல்லும் ரெயிலில் எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த 2 பேரும், நகைகள் அடங்கிய பார்சலை இருக்கையின் கீழ் வைத்திருந்தனர்.
நகைகள் கொள்ளை
நேற்று முன்தினம் அந்த ரெயில் ராஜஸ்தான் மாநிலம் சிட்டோகர் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த போது இருவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். ரெயில் நிம்பாரா நிலையத்தில் வந்து நின்ற பிறகே இருவரும் கண் விழித்தனர். அப்போது, இருக்கைக்கு கீழே வைத்திருந்த நகைகள் அடங்கிய பார்சல் காணாமல் போயிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர். மேலும் ரெயில்வே போலீசிலும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகள் அடங்கிய பார்சலை கொள்ளையடித்த மர்மஆசாமிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story