மாவட்ட செய்திகள்

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் 270 பேர் கைது + "||" + The Communist Party of India (CPI) has arrested 270 people in the fray for fighting impunity

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் 270 பேர் கைது

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் 270 பேர் கைது
திருவாரூர், மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 8 பெண்கள் உள்பட 270 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை, ஓட்டு, தொகுப்பு, பசுமை மற்றும் மாடி வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் முழுமையாக வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கும் மற்றும் மரங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். புயல் கரையை கடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் முழுமையாக நிவாரணம் வழங்காததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது.


அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, ஜோசப், நாகராஜன், முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் புலிகேசி (திருவாரூர்), கேசவராஜ் (கொரடாச்சேரி), நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 8 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாலாபாண்டியன், அம்புஜம், ஒன்றிய செயலாளர்கள் வீரமணி (மன்னார்குடி), மாரிமுத்து (கோட்டூர்), மன்னார்குடி நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து காந்திரோடு, கடைத்தெரு வழியாக தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், விவசாய சங்க நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் சுந்தர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
2. ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தர்ணா
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
4. பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஆசிரியை பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு: தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியையின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முதன்மை கல்வி அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.