மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை + "||" + Investigating through the footage recorded in a motorcycle racket of Rs.1.1 lakhs

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை
திருவாரூரில் தவிடு வியாபாரியின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் சதானந்தம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது34). இவர் அரிசி ஆலைகளில் இருந்து மொத்தமாக தவிடு வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று முருகானந்தம் திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கிலிருந்து ரூ1½ லட்சத்தை எடுத்து மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது வீட்டின் அருகே வாழவாய்க்கால் என்ற இடத்தில் உள்ள டீக்கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணம் இருந்த பையை கையில் எடுத்துக்கொண்டு டீ குடித்தார்்.

பின்னர் வீட்டுக்கு செல்ல புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளின் சாவியை காணவில்லை. இதனால் பணப்பையை மோட்டார் சைக்கிள் மீது வைத்து விட்டு டீக்கடைக்குள் சென்று சாவியை தேடினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து பணப்பையை நைசாக திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.

முருகானந்தம் மீண்டும் மோட்டார் சைக்கிள் அருகில் வந்து பார்்த்த போது ரூ.1½ லட்சம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முருகானந்தம் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று

விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கியில் இருந்து பணத்தை முருகானந்தம் எடுப்பதை மர்ம நபர் ஒருவர் நோட்மிட்டு பின் தொடர்ந்து வந்து அவர்(முருகானந்தம்) ஏமாந்த நேரத்தில் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டீக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...