நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்


நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 7:25 PM GMT)

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்,

பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த செய்தி பொதுமக்களிடம் வேகமாக பரவியதால் பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நாகை காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு நேற்று மக்கள் குவிந்தனர்.

பரபரப்பு

இதனால் நாகையில் பல்வேறு கடைகளில் கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை காட்டிலும் நேற்று ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:- தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடாததால் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை உண்டு. ரேஷன் கடைகளில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினர். 

Next Story