மாவட்ட செய்திகள்

தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை + "||" + What is the cause of suicide by a private bus employee drinking poison in Tanjore? Police investigation

தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தஞ்சையில் தனியார் பஸ் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் அத்திவனம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் ரஞ்சித் (வயது22). இவர் ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.


இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித், தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்கிடந்தார். இதையடுத்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக அருகில் இருந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டு கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...