மாசு இல்லாத பொங்கலை கொண்டாடுவோம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


மாசு இல்லாத பொங்கலை கொண்டாடுவோம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 7:47 PM GMT)

மாசு இல்லாத பொங்கலை கொண்டாடுவோம் என்று சென்னை ஐகோர்ட்டில் நடந்த பொங்கல் விழாவில் நீதிபதி பேசினார்.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று ஐகோர்ட்டில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், எம்.எஸ்.ரமேஷ், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் எஸ்.காமராஜ், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் வி.நன்மாறன், டி.ஆர்.தாரா மற்றும் வக்கீல்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நடுவராக கொண்ட பட்டிமன்றமும், பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் பேசிய தலைமை நீதிபதி, ‘பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என்று பேசினார். நீதிபதி எம்.கோவிந்தராஜ் பேசும்போது, போகி பண்டிகையின்போது தேவையில்லாத பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக்கூடாது. இதனால், மாசு ஏற்படுகிறது. மாசு இல்லாத பொங்கலை கொண்டாடுவோம் என்று பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும்’ என்றார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து பேசினார்.

Next Story