மாவட்ட செய்திகள்

அரியலூர் அருகே சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் + "||" + Cement plant near Ariyalur is a 2nd day of contract workers

அரியலூர் அருகே சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

அரியலூர் அருகே சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
அரசு சிமெண்டு ஆலையில் பணி புரியக் கூடிய 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி,

அரியலூர் அருகே உள்ள அரசு சிமெண்டு ஆலையில் பணி புரியக் கூடிய 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


நேற்று 2-வது நாளாக அரசு சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை உயர் அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.