திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிவடையும்.
திருச்சி,
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கபடிக்கு தனியாக மைதானம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் அமரும் இடம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகள் எப்போது முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, இன்னும் 3 மாதத்தில் கபடி மைதானம் அமைக்கும் பணி முடிவடைந்து விடும் என்றனர்.

Related Tags :
Next Story