மாவட்ட செய்திகள்

மினிபஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: குமரி வாலிபர்கள் பலி குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம் + "||" + The minibus-motorcycle clash: Wicked when the young victims return from bath in the bathroom

மினிபஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: குமரி வாலிபர்கள் பலி குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்

மினிபஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: குமரி வாலிபர்கள் பலி குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்
மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பிய 2 வாலிபர்கள் பலியானார்கள்.
தென்காசி,

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே மேலகருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 25), பரசேரி அருகே கொன்னக்குழிவிளையைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அஜித் (22). இவர்கள் அங்குள்ள இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.


இந்த நிலையில் சிவசங்கரும், அஜித்தும் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு வந்தனர். அங்குள்ள அருவிகளில் குளித்து விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்கள். மோட்டார் சைக்கிளை சிவசங்கர் ஓட்டினார்.

குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிரே தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு ஒரு மினி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினிபஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சிவசங்கர், அஜித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர்.

மேலும் இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவரான சாம்பவர்வடகரையைச் சேர்ந்த குமார் (25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி
போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியான வாலிபரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. தாராபுரம் அருகே பரபரப்பு: கள்ளக்காதலியுடன் சேர்ந்து வி‌ஷம் குடித்த வாலிபர் சாவு
தாராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. இரும்புச் சங்கிலியால் கட்டி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் தண்ணீரில் மூழ்கி பலி
மேஜிக் நிகழ்ச்சியின்போது, இரும்புச் சங்கிலியால் கட்டி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
4. மதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு
போலீசார் லத்தியை தூக்கி எறிந்ததில் வாலிபர் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
5. புதுக்கோட்டை அருகே துயரம்: குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுமி பலி
புதுக்கோட்டை அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.