மாவட்ட செய்திகள்

காரைக்குடியில், விஷம் குடித்த பெண் போலீஸ் சாவு + "||" + Karaikudi, Police killed the woman swallowed poison

காரைக்குடியில், விஷம் குடித்த பெண் போலீஸ் சாவு

காரைக்குடியில், விஷம் குடித்த பெண் போலீஸ் சாவு
காரைக்குடியில் குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள நெட்டேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 34). இவர் சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கும், இலுப்பைக்குடியைச் சேர்ந்த முருகப்பன் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சாவித்திரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து காரைக்குடி போலீஸ் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சாவித்திரி கடந்த மாதம் 30-ந்தேதி விஷம் குடித்தார்.

அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாவித்திரி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.