மாவட்ட செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது + "||" + Near kottakkuppam School student raped - Worker arrested in the Paxo Act

கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,

வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஆறுமுகம் (வயது 38). இவர் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி உணவு இடைவேளையின்போது அங்குள்ள வேலந்தோப்பு பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ஆறுமுகம் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மாணவி பாலியல் பலாத்காரம், 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தாராபுரத்தில் மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.