பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வாங்க ரேஷன் கடையில் காலையிலேயே குவிந்த பொதுமக்கள்


பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வாங்க ரேஷன் கடையில் காலையிலேயே குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Jan 2019 3:45 AM IST (Updated: 11 Jan 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. இதற்காக பொதுமக்கள் நேற்று காலையிலேயே ரேஷன்கடையில் குவிந்தனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் பகுதியில் அடங்கிய வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் திருவள்ளூர் மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 1500-க்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவித்த நிலையில் சிறப்பு பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மீஞ்சூர் ரமணா நகர் ரேஷன் கடை முன்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை 6 மணிக்கே குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

ரேஷன் கடை ஊழியர்கள் வந்த உடன் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Next Story