கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் இருந்து சிவஞானபுரம் வழியாக வாகைதாவூர் வரையிலும் ரூ.58 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், வில்லிசேரி நாற்கர சாலையில் இருந்து வில்லிசேரி வரையிலும் ரூ.20 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், கோவில்பட்டி கிருஷ்ணாநகர்-மந்திதோப்பு இடையே ரூ.27 லட்சத்து 34 ஆயிரம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் ஆசூர்-காப்புலிங்கம்பட்டி இடையே புதிய சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார்கள் பரமசிவன் (கோவில்பட்டி), லிங்கராஜ் (கயத்தாறு), யூனியன் ஆணையாளர்கள் கிரி, முத்துகுமார், சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, நிலவள வங்கி தலைவர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கணேஷ் பாண்டியன், மகேஷ்குமார், துணை தலைவர் செண்பகமூர்த்தி, மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story