செஞ்சி பனமலையில் உள்ள சுனையில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி பலி


செஞ்சி பனமலையில் உள்ள சுனையில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி பலி
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 6:07 PM GMT)

செஞ்சி பனமலையில் உள்ள சுனையில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி பரிதாபமாக பலியானார்கள். தோழி கண் முன்னே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சி,

விழுப்புரம் வண்டிமேடு பொன் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவருடன் அதே பிரிவில் பயிலும் அய்யங் கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் சுவேதா(19), மற்றொரு மாணவி ஆகியோரும் நண்பர்கள்.

இவர்கள் 3 பேரும் செஞ்சி அருகே பனமலை கிராமத்தின் மலை உச்சியில் உள்ள தாளகீஸ்வரர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று 3 பேரும் கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விழுப்புரத்துக்கு வந்தனர். ஆனால் அவர்கள் கல்லூரிக்கு செல்லாமல், சுந்தர்ராஜியின் ஸ்கூட்டியில் பனமலைக்கு சென்றனர்.

மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று 3 பேரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், கோவில் பின்புறமுள்ள சுனை கரையோரத்தில் அமர்ந்து, தாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தின்பண்டங் களை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதில் சிறிதளவை சுனையில் உள்ள மீன்களுக்கு போட்டபடி விளையாடிக் கொண் டிருந்தனர். அந்த சமயத்தில் பாசியில் மிதித்ததால் சுவேதா கால் வழுக்கி, சுனையில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த சுவேதாவை கண்டு சுந்தர்ராஜ் திடுக்கிட்டார். உடனே அவரை காப் பாற்றுவதற்காக சுந்தர்ராஜ் சுனையில் குதித்தார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாத தால் தண்ணீரில் தத்தளித் தார்.

சுவேதா, சுந்தர்ராஜ் ஆகியோர் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு மாணவி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். பின்னர் இரு வரையும் எப்படியும் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த மாணவி யும் சுனையில் இறங்கினார்.

அவருக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்தபடி கரையோரமுள்ள ஒரு கல்லை பிடித்தார். பின்னர் அந்த மாணவி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். அதற்குள் சுவேதாவும், சுந்தர்ராஜூம் தண்ணீரில் மூழ்கினர்.

மாணவியின் சத்தம் கேட்டு, அந்த கோவிலுக்கு வந்தவர்கள் ஓடிவந்தனர். சுனையில் கரையோரத்தில் ஒரு கல்லை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மாண வியை அவர்கள் மீட்டனர். அப்போது அவர், எனது நண்பரும், தோழியும் தண்ணீ ரில் மூழ்கி விட்டதாகவும், அவர்களை காப்பாற்றுமாறும் கெஞ்சினார். இதையடுத்து நீச்சல் தெரிந்த சில இளைஞர்கள் சுனையில் இறங்கி தேடிப் பார்த்தனர். இதனிடையே தகவல் அறிந் ததும் அனந்தபுரம் போலீசார் விரைந்து வந்தனர். போலீ சாரும், இளைஞர்களும் மாணவரையும், மாணவியை யும் தேடினர். 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு, 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் சுந்தர்ராஜ், சுவேதா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோ தனைக்காக முண்டி யம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story