மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் காபியில் தூக்க மாத்திரை கலந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு + "||" + 5 pound chain flush to the girl attending sleeping pill in coffee

ஈரோட்டில் காபியில் தூக்க மாத்திரை கலந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

ஈரோட்டில் காபியில் தூக்க மாத்திரை கலந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
ஈரோட்டில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பட்டப்பகலில் துணிகரமாக பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம பெண் ஒருவர் பறித்து சென்றார்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் திலகர் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி நல்லம்மாள் (40). தங்கராஜ் தன்னுடைய வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். தரைதளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்காக வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீடு வாடகைக்கு இருப்பதை தெரிந்து கொண்டு நேற்று காலை தங்கராஜ் வீட்டுக்குள் வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நல்லம்மாளிடம், அந்த பெண் வாடகை தொடர்பாக பேச்சு கொடுத்தார். அவரும் வாடகை குறித்து பேசி உள்ளார்.

பின்னர் நல்லம்மாளிடம் காபி போட்டு தரும்படி அந்த பெண் கூறி உள்ளார். நல்லம்மாளும் காபி போடுவதற்காக சமையல் அறைக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணும் பின் தொடர்ந்து சென்று காபி போடுவதற்கு உதவி செய்தார். பின்னர் காபி போட்டு முடித்தவுடன் 2 டம்ளர்களில் காபியை ஊற்றி உள்ளனர்.

இதற்கிடையே அந்த பெண் நல்லம்மாள் குடிக்கக்கூடிய காபியில் நைசாக தூக்க மாத்திரையை கலந்துள்ளார். பின்னர் 2 பேரும் காபி குடித்துள்ளனர். தூக்க மாத்திரை கலந்த காபியை குடித்த நல்லம்மாள் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண் நல்லம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மயக்கம் தெளிந்து நல்லம்மாள் எழுந்து பார்த்தபோது அவருடைய கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை காணவில்லை. சங்கிலியை அந்த பெண் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நல்லம்மாள் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச்சென்ற மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து 5 பவுன் சங்கிலியை மர்ம பெண் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆவடி அருகே போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் கைது
தங்கம் என்று கூறி போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்
மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை அபேஸ்
ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் பறிமுதல் அரியலூர் வாலிபர் சிக்கினார்
மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் கடத்தி வந்த அரியலூரை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.