வீட்டுமனை பட்டா வழங்க பெண்ணிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து ஊழியர் கைது ஊழல் தடுப்பு படையினர் அதிரடி


வீட்டுமனை பட்டா வழங்க பெண்ணிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து ஊழியர் கைது ஊழல் தடுப்பு படையினர் அதிரடி
x
தினத்தந்தி 12 Jan 2019 2:35 AM IST (Updated: 12 Jan 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்க பெண்ணிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம பஞ் சாயத்து ஊழியரை ஊழல் தடுப்பு படை யினர் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் தாலுகா அரபிகொத்தனூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக இருப்பவர் மல்லிகார்ஜுனப்பா. இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த சுதா என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக அவர், கிராம பஞ்சாயத்து ஊழியர் மல்லிகார்ஜுனப்பாவிடம் ெசன்று கேட்டுள்ளார்.

அப்போது, மல்லிகார்ஜுனப்பா, தனக்கு ரூ.4,500 லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுதா, இதுகுறித்து கோலார் ஊழல் தடுப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தமனிடம் புகார் கொடுத்தார்.

கிராம பஞ்சாயத்து ஊழியர் கைது

இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் சுதா, கிராம பஞ்சாயத்து ஊழியர் மல்லிகார்ஜுனப்பாவுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி நேற்று மாலை சுதா கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று, மல்லிகார்ஜுனப்பாவிடம் ரூ.4,500-ஐ கொடுத்தார். அந்த பணத்தை மல்லிகார்ஜுனப்பா வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் மல்லிகார்ஜுனப்பாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் மல்லிகார்ஜுனப்பாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story