மாவட்ட செய்திகள்

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து:சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் சாவுபலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது + "||" + Kamgar Hospital Fire accident

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து:சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் சாவுபலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து:சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் சாவுபலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை

மும்பை அந்தேரியில் உள்ள காம்கார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அன்றைய தினத்தில் மட்டும் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். தீ விபத்தில் காயம் அடைந்த சுமார் 175 பேர் 7 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இதில், 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இவர்களில் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை உள்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.

பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தீ விபத்தின் போது, பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட திவாவை சேர்ந்த வித்தல் பாகடே(வயது78), சாக்கிநாக்காவை சேர்ந்த பெண் இட்னா காடூன்(65) ஆகிய 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தீ விபத்தின் போது காயம் அடைந்த மேலும் பலருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...