மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம் காதல் மனைவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது + "||" + Suspicion in behavior Love his wife with a knife and stabbed the young men arrested

நடத்தையில் சந்தேகம் காதல் மனைவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

நடத்தையில் சந்தேகம் காதல் மனைவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பேரூர்,

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நேதாஜிநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). கட்டிட தொழிலாளி. கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (25). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவா (7) ஏஞ்சல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சரவணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

நேற்று வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சரவணன் திடீரென்று காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது சுகந்தி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செல்போனில் பேசியது தொடர்பாக கேட்டு சுகந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சரவணன் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, சரவணன் அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவி சுகந்தியின் கழுத்தில் குத்தினார். இதனால் வலியால் அலறி துடித்த அவரின் வாயிலும் கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சுகந்தியை மீட்டு தொண்டாமுத்தூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக சரவணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
2. நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி குண்டடம் அருகே கொடூர சம்பவம்
குண்டடம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரது கணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.