மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Namakkal district Bogie smokeless awareness of the Procession

நாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் மாவட்டத்தில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேளாண் ஆசிரியர் தங்கவேல், போகிப்பண்டிகையன்று பழைய பொருட்கள் மற்றும் நெகிழி பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல், காற்று ஆகியவை மாசடைவது குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி கூறினார்.

இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். முடிவில் பசுமைப்படை ஆசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.

சவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெப்படையில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணா, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசிவா, சாரண, சாரணியர் ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா போகி மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...